யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இன்று முதல் நோயாளிகளை பார்வையிடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று முதல் ஒரு நோயாளிகளை இருவர் மாத்திரமே பார்வையிடுவதற்கு அனுமதிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இந்த நாட்களில் டெங்கு மற்றும் சாதாரன காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 1200க்கு அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சை பெறுவதனால், அவர்களை பார்வையிடுவதற்கு வரும் உறவினர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதனால் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுவதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தினமும் நோயாளிகளை பார்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ள நேரத்தில் வைத்தியசாலை அறைகளில் முறையாக நோயாளிகள் நிறைந்து காணப்படுகின்றமையினால் சிகிச்சைக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய இன்று முதல் ஒரு நோயாளியை பார்ப்பதற்காக இரண்டு உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அனுமதி பத்திரம் ஒன்றையும் கொண்டு செல்ல வேண்டும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.