ஜிம்பாப்வே நாட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் மேற்கு பகுதியை சேர்ந்த ஷோலுட்ஷோ மாவட்டத்தில் லாரியில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இதில் 21 பேர் பலியாயினர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், விபத்து நிகழ்ந்த இடத்தில் 15 பேரும் மருத்துவமனையில் 6 பேரும் பலியானதாக தெரிவித்துள்ளனர்.