மாகாண சபைகள் தேர்தலிற்கான எல்லை நிர்ணயத்திற்காக யாழ்ப்பாணம் மற்றும் தீவகங்கள. ஒண்றினைக்கப்பட்ட தொகுதியாக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளாலும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலின் புதிய திருத்தத்திற்கு அமைய 50 வீதம் தொகுதி வாரியாகவும் 50 வீதம் விகிதாசார ரீதியிலும் பிரதிநிதிகள் தேர்வு இடம்பெறவுள்ள நிரையில் மாவட்ட ரீதியிலான எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்துக்கள் பெறப்படுகின்றன. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்கான மாகாண சபைத் தேர்தலிற்கான தொகுதியாக குறைந்த பட்சம் 70 ஆயிரம் மக்களை உள்ளடக்கிய வகையில் யாழ்ப்பாண குடாநாட்டினை 8 தொகுதிகளாக பிரிக்க வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்த்து.
இதன் அடிப்படையில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 882 மக்களையுடைய யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 50 ஆயிரத்து 759 பேருடன் , நெடுந்தீவு , ஊர்காவற்றுறை தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளை உள்ளடக்கிய 29 ஆயிரத்து 848 அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய வகையில் யாழ்ப்பாணம் – தீவகம் தொகுதியாகவும் , நல்லூர்ப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 68 ஆயிரத்து 142 பேருடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஜே/ 61, 257, 258 , 259 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 75 ஆயிரத்து 784 பேருடன் நல்லூர்த் தொகுதி எனவும்.
காரைநகர் பிரதேச செயலகத்தின் 9 ஆயிரத்து 576 பேரையும் , வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் 46 ஆயிரத்து 438 மக்களையும் , வலிகாமம் தெற்கு பிரதேச செயலகத்தின் கிராம சேவகர் பிரிவுகளான ஜே 131, 132,133,134,135,136 மற்றும் 141,142,143,144 ஆகிய 10 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 21 ஆயிரத்து 895 மக்கள் வாழ் பிரதேசத்தினையும் இணைத்து 77 ஆயிரத்து 909 மக்களிற்கும் வட்டுக்கோட்டைத் தொகுதியாகவும். வலி. வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் 29 ஆயிரத்து 518 மக்களையும் வலி. தெற்கின் கிராம சேவகர் பிரிவுகளான ஜே / 195 முதல் ஜே / 211 வரையான 17 கிராம சேவகர் பிரிவில் வாழும் 28 ஆயிரத்து 232 மக்களையும் வலிகாமம் தென் மேற்கு பிரதேச செயலகத்தின் ஜே / 145 முதல் 156 வரையான கிராமங்களின் 19 ஆயிரத்து 762 மக்களையும் இணைத்து 76 ஆயிரத்து 762 மக்களுடன் காங்கேசன்துறைத் தொகுதியெனவும் கோரப்பட்டுள்ளது.
இதேபோன்று சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவின் 64 ஆயிரத்து 704 மக்களுடன் , வலி. தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஜே / 280 வாதரவத்தை கிராமத்தின் ஆயிரத்து 35 மக்களையும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் ஜே / 382 கப்புது கிராமத்தின் 280 மக்களையும் உள்ளடக்கிய வகையில் 66 ஆயிரத்து 19 மக்களிற்குமாக சாவகச்சேரித் தொகுதி கோரப்பட்டுள்ளது. இதேபோன்று வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினை உள்ளடக்கிய 47 ஆயிரத்து 565 மக்களையும் , வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் 12 ஆயிரத்து 766 மக்களையும் வடமராட்சி தென் மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம சேவகர் பிரிவுகளான ஜே / 370 முதல் 374 வரையான 5 கிராம சேவகர் பிரிவுகளுடன் ஜே/ 378,379,380 ஆகிய 8 கிராம சேவகர் பிரிவினையும் சேர்ந்த 9 ஆயிரத்து 551 மக்களையும் உள்ளடக்கிய வகையில் மொத்தமாக 69 ஆயிரத்து 882 மக்கள் பிரதேசத்தினையும் பருத்தித்துறை தொகுதியாகவும் கோரப்பட்டுள்ளது.
இதேநேரம் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் ஜே 260 முதல் ஜே/ 270 வரையான 11 கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த 31 ஆயிரத்து 666 மக்கள் பிரதேசத்தினையும் , விலி. தெற்கு பிரதேச செயலகத்தின் ஜே / 182 முதல் ஜே/ 194 வராயான 13 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதியின் 24 ஆயிரத்து 784 மக்கள் பிரதேசத்தினையும் வலிகாமம் தென் மேற்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள ஜே / 129 , 130 , 137, 138 , 139 , 140 ஆகிய ஆறு கிராம சேவகர் பிரிவின் 11 ஆயிரத்து 362 மக்களுமாக மொத்தம் 67 ஆயிரத்து 812 மக்கள் பிரதேசத்தினையும் கோப்பாய் – மானிப்பாய் தொகுதி எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இவ்வாறே எட்டாவது தொகுதியாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பருத்தித்துறை தொகுதிக்குள் அடங்காத ஏனைய கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் 35 ஆயிரத்து 899 மக்கள் பிரதேசத்தினையும் , வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் ஜே / 271 முதல் 279 வரையும் , ஜே / 281 முதல் 287 வரையுமான 16 கிராம சேவகர் பிரிவின் 33 ஆயிரத்து 604 மக்கள் பிரதேசத்தினையும் இணைந்த வகையில் உடுப்பிட்டி அச்சுவேலித் தொகுதியாகவும் முன்மொழிந்த வகையிலேயே 8 தொகுதிகளும் கோரப்பட்டுள்ளன.