Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமை முக்கியமானது

November 19, 2017
in News, Politics
0

இன்று நாட்டில் அடிக்கடி முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்றது அதற்கு என்ன காரணம் என்று தேடினால் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பிறகு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவனாக வந்த ஹக்கிம் அவர்களின் ஏமாற்று அரசியல் தான் காரணம் அதனால் சமுதாயத்தை விலை பேசி தன்னை பாதுகாத்து சொகுசா வாழும் ஹக்கீம் சமுதாயத்துக்காக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் நாட்டில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியல் காலத்தில் ஒரு முஸ்லிம் நபர் தாக்கப்பட்டால் அல்லது ஒரு வீடு சேதமாக்கப்பட்டால் பாராளுமன்றம் கலைந்து ஆட்சி முடிந்து விடும் என்ற பதற்றமான நிலை பாராளுமன்றத்துக்குள் காணப்பட்டது

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் சமுதாய அரசியல் என்பது முஸ்லிம்களுக்கு பொண்னான பொற்காலம் என்று தான் கூற வேண்டும் அந்த காலத்தை மறக்க முடியாமல் இன்றும் தலைவர் அஸ்ரப் அவர்களை மக்கள் நினைவு கூறுகின்றனர்

தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் சதி முயற்சியால் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பதவியை பறித்தெடுத்த ஹக்கிம் தனது ஐஸ் பழ வியாபாரத்தின் பாதையில் அரசியல் வியாபாரமும் செய்ய முற்பட்டதால் சமுதாய அரசியல் செய்த தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியலை ஹக்கிமால் நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட்டது அதனால்தான் இன்று முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தபடுகின்றன.

இன்று நாட்டில் அடிக்கடி ஏற்படும் கலவரம் என்பது மக்கள் பயம் கொண்டது அல்ல அது மறைமுகமான அரசியல் பயம் கொண்டதாகவே இருக்கிறது சிலர் அரசியலில் தனது இலக்கை அடைய நாம் பொழுது போக்காக விளையாடும் டூடு கட்டை போல் முஸ்லிம்களை வைத்து காய் நகர்த்தி கலவரத்தை தூண்டுகின்றனர் அதனால் ஆட்சியை பிடிக்கின்றனர் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் தமிழர்கள் போல் முஸ்லிம்களும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் .

ஆனால் அது அரசியல் வியாபாரம் செய்யும் ஹக்கிம் அரசியலில் இருக்கும் வரை நடக்காத காரியம் அதனால் இந்த நாட்டில் முஸ்லிம் சமுதாயம் நிம்மதியாகவும் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்றால் சமுதாயத்தில் பித்னாவை உருவாக்கி அரசியல் வியாபாரம் செய்து சொகுசா வாழும் ஹக்கிமை அரசியலிருந்து ஒரங்கட்டி சமுதாயத்துக்காக உயிரையே மதிக்காமல் அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமையின் கீழ் சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றினைய வேண்டும் இது இன்றைய காலத்தின் (பர்ளு) கட்டாய கடமையாகும்.

நாம் மாற்று இன மக்களை குறை கூற முடியாது எமது இனமே எம்மை காட்டி கொடுக்கின்றனர் அதில் முக்கிய பங்கு வகிப்பவர் பதவி மோகம் கொண்ட ஹக்கிம் என்று தான் கூற வேண்டும் அவர் தனது பதவிக்காக போகுமிடெமல்லாம் பொய் வாக்குறுதி கொடுப்பது மற்றவர்களை மோதவிடுவது முஸ்லிம் ஊர்களில் (சாய்ந்தமரு கல்முனை ) பித்னாவை உருவாக்குவது இப்படியான செயல்களால் கூட முஸ்லிம்கள் சண்டை பிடிக்கும் நிலை வந்துள்ளது இதனால் ஹக்கிம் செய்யும் அரசிலை முஸ்லிம்கள் நிராகரித்தால் நாம் ஒற்றுமையாக வாழலாம்.

பல வருடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக மகுடம் சூட்டிக் கொண்டு இருக்கும் ஹக்கிம் இந்த சமுதாயத்துக்கு என்ன செய்துள்ளார் என்று தேடினால் ஏதுவுமே இல்லை அவர் செய்து கொண்டு இருக்கும் சாதனை என்றால் தனது நன்பன் ரனில் விக்கிரமசிங்க அவர்கள் தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியை வளர்ப்பதே அவரின் சாதனை அதற்காக கவனம் செலுத்த கலகெதர ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளராக இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக வேஷம் போட்டு முஸ்லிம் சமுதாயத்தை அழித்து கொண்டு இருக்கும் ஹக்கிம் அவர்களின் தலைமையே இன்று முஸ்லிம்களுக்கு சாபக்கேடாக உள்ளது எனவே இனிமேல் முஸ்லிம்களின் பிரச்சினை விடயத்தில் ஹக்கிமை நம்பாமல் நாம் அமைச்சர் றிசாத் அவர்களின் உதவியை நாடினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளில் சமுதாயத்துக்காகவும் ஜாதி பேதமின்றி சகல இன மக்களுக்காகவும் அரசியல் செய்யும் ஒரு அரசியல்வாதி என்றால் அது அமைச்சர் றிசாத் என்று தான் கூற வேண்டும் அதனால்தான் இன்று அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது அதை பலப்படுத்தி சமுதாய துரோகிகளை விரட்ட முஸ்லிம்கள் முன் வர வேண்டும்

Previous Post

36 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இருவர் கொடிகாமத்தில் கைது

Next Post

நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம்-வடக்கு மாகாண முதலமைச்சர்

Next Post

நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம்-வடக்கு மாகாண முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures