36 கிலோகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை கொடிகாமம் பொலிஸார் நேற்றிரவு(18) கைது செய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொடிகாமம் பகுதியில் தென்னங்காணியில் உள்ள சிறிய குடிசை ஒன்றில் வைத்து கஞ்சாவினை தரம்பிரித்து கொண்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தற்போது பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

