ஜெர்மனியில் வானில் திடீரென வண்ண ஒளியுடன் ஒரு மர்மப் பொருள் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹோச்சேன் நகரில் இரவு திடீரென வண்ண ஒளியுடன் ஒரு பொருள் வானில் பறந்து சென்றுள்ளது.
பந்து போன்று காணப்பட்ட அந்த பொருள் முதலில் வெள்ளை நிறத்திலிருந்து பின்னர் பச்சை நிறமாக மாறி இறுதியில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே மறைந்துள்ளது.
இதனால் ஒளியுடன் பறந்த அந்தப் பொருள் விண்கல்லா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆனால் விண்கல் தீப்பற்றி எரிந்தபடிதான் செல்லும் என்பதால் அந்தப் பொருள் விண்கல்லாக இருக்க வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அது விமானம் என ஜெர்மன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பறந்த அந்த மர்மப் பொருள் சீனாவின் நொறுங்கிய விண்வெளி மையம் அல்லது வேற்றுக் கிரக வாசிகளாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்த வானில் தோன்றிய அந்த மர்மப் பொருள் என்ன என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.