மூன்று பயணிகளை ஆயுத முனையில் கொள்ளையடித்த கொள்ளையன் ஒருவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, மத்திய அமெரிக்க நாடான Honduras இல் இருந்து பரிசுக்கு சுற்றுலாவாக வந்திருந்த மூன்று பயணிகளிடமே கொள்ளையிடப்பட்டுள்ளது. வாடகை மகிழுந்து சாரதியாக வேடமணிந்து, குறித்த மூன்று பயணிகளையும் அழைத்துச் சென்ற நபர் ஒருவன் அவனது மகிழுந்துக்குள் ஏற்றியுள்ளான். அதன் பின்னர் ஆயுதங்களை காண்பித்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட சில உடமைகளை திருடியுள்ளான்.
சாள்-து-கோல் விமான நிலையத்தில் 3 வது முனையத்தின் வாசலிலேயே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. பின்னர் காவல்துறையினரை தொடர்புகொண்ட குறித்த நபர்கள் கொள்ளையனை தெளிவாக அடையாளம் காட்டினார்கள். இதனால் குறித்த கொள்ளையன் அடுத்த 30 நிமிடங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். செந்தனியின் Saint-Ouen பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். இதேபோன்று முன்னரும் ஒரு நபரிடம் பணம் பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையன் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறான்.