நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஹாவாஎலிய பகுதியில் அமைந்துள்ள மின்சார சபைக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் நுவரெலியா ஹாவாஎலிய கெமுனு மாவத்தை பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான பெரியசாமி சியாமலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பதியிலுள்ள பிரதேசவாசிகள் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை இச்சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.