இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட வேளையில் அவர்கள் மீன்பிடிக்காக பயன்படுத்திய டொலர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட நபர்கள் மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்திய உபகரணங்கள் காங்கேசன்துறை கடற்படை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்படை அத்தியட்சகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.