பாரதியஜனதாக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சிவ் குமார் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர், இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் சிவ் குமார் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரை மறித்து சாரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் சிவ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில், பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.