அம்பாறை மாவட்டம் கரையோர பகுதிகளில் இன்று காலை கடல் வருவதாக பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கடற்கரையிலிருந்து பிரதான வீதிகளை நோக்கி நகரந்து வருவதுடன் வீதிகளில் சன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீர் இறங்கிக் காணப்படுவதால் இப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனையில் உள்ள கோணாவத்தை ஆற்றின் நீரும் கடல் நீரும் உள்ளிறங்கி காணப்படுவதாக இப்பிரதே மக்கள் தெரிவிக்கின்றனர்.
திடீரென இப்பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இயல்புநிலை மாற்றம் அடைந்துள்ளதாக இப்பிரதேச செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
சுனாமி எச்சரிக்கை தொடர்பில் அரசு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ எச்சரிக்கையும் விடுக்காத நிலையில் மக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அம்பாறை மாவட்ட எமது செய்தியாளர் அப்பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார்.
கரையோரங்களில் உள்ள பாடாசலைகளை கலைக்குமாறு பெற்றோர்கள் பாடைசாலைகளின் முன்னிலையில் சுற்றி நிற்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்
மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்.