வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியாக பின்னிப் பிணைந்த உறவு இருந்து வருவதாகவும், வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போய், பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே எனவும் கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பி. இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதோர் நிலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவே காராணமாக அமைவார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
