பெற்றோல் விநியோகம் இன்றைய தினத்திற்குள் வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
நேற்று(09) இரவு 7.30 மணியளவில் நாடு பூராகவும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அந்தக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
40000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய நவெஸ்கா லேடி கப்பல் நேற்று( முன்தினம்(08) வந்ததுடன், முத்துராஜவளையில் அது நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, நேற்று(09) அது சோதனை செய்யப்பட்டதுடன், அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என்பதால், நேற்று இரவு முதல் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.