கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக திரு.பியசேன கமகே இனது பெயரினை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, அதன் உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர மற்றும் எஸ்.ரத்னஜீவன் ஆகியோரது கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, இன்று(10) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து செய்து கொண்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற அங்கத்தவர் உரிமையை இழக்கப்பட்டதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைவாக ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கே இவர் நியமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.