மினுவாங்கொட 18 ஆம் கட்டைப் பகுதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 2.00 மணியளவில் லொறியொன்று அதிசக்திவாய்ந்த மின்கம்பத்தில் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியில் முன்வரிசையில் பயணித்த ஐந்து பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவரே உயிரிழந்துள்ளனர்.
26, 27 மற்றும் 54 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.