பிரிட்டிஷ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு ஆதாரங்கள் இருந்தால் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில் பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் பலோன், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பெண் நிருபரை தகாதவிதமாக தொட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அமைச்சரும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் பலோன் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், எனது கடந்த கால மோசமான நடத்தைக்குப் பொறுப்பேற்று பதவி விலகுகிறேன் என்று குறிப்பிட் டுள்ளார்.