இந்த வருடத்தில் ஹெரோயின் போதைப்பொருளைப் பயன்படுத்துவோர் 63 வீதமாக அதிகரித்துள்ளது என்று தேசிய அபாயகர ஔடதங்கள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வருடத்தில் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த வருடம் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.