Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாவையை முதலமைச்சராக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக கஜேந்திரன் குற்றச்சாட்டு !!

October 31, 2017
in News, Politics
0

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொள்கையில் உறுதியாக இருப்பதனால் அவரை அரசியல் அரங்கில் ஒதுக்குவதற்காகவே கொள்கையில்லாது அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட கூடிய மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்குவதற்காக தமிழ்த் தேசிய முகமூடி அணிந்தவர்கள் இப்போதே பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று(30) இடம்பெற்ற ஊட்கவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொள்கையில் உறுதியாக இருக்கின்றவர்களே வட மாகாண முதலமைச்சராக வரவேண்டும்.ஏதோ வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பிற்கு தமிழ் மக்களுடைய ஆதரவை பெறுவது தான் இந்த அரசின் கபடத்தனம். இந்த நிலையில் சுமந்திரன், சம்பந்தன், மாவை ஆகியோர் தமிழ் மக்களுடைய தலைவர்களாக என்றும் இருக்க முடியாது. மாகாண சபை எங்களுக்கு தீர்வாகாது என்ற நிலையிலும் கூட தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் வடக்கு மாகாண சபையை கைப்பற்றிவிட அனுமதித்து விடக்கூடாது.
இதுவரை காலமும் வடக்கு மாகாண சபை தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமைக்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், அமைச்சர் அனந்தி ஆகியோர் பக்கபலமாக இருந்துள்ளனர். இதனால் தான் மாகாண சபையில் இன அழிப்பு தீர்மானம் கூட கொண்டுவரப்பட்டிருந்தது. என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Previous Post

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு !!

Next Post

பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

Next Post

பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures