மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று 29-10-2017 பிரித்தானியா ஒக்ஸ்போட்டில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாபெரும் சிரமதான பணிகள் நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 100இற்கும் மேலான செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் இச் சிரமதானப் பணியில் பங்களிப்புச் செய்தனர்.
அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.
இதேவேளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிற்கிடையேயான ஒன்று கூடலும், சிரமதானமும் கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தமிழர் வாழும் நாடொனறில் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பில் மாவீரர் தினத்தினை நாம் அனுட்டிப்பது என்பது ஈழத்திற்கும், தமிழருக்கும் கிடைத்த சிறப்பு என தாம் கருதுவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகப் பிரிவு செயற்பாட்டாளரான அஷந்தன் தியாகராஜா தெரிவித்தார்.