Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா!

October 2, 2017
in Sports
0
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சீராக ரன்களைக் குவித்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது.

243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 124 ரன்கள் எடுத்த போது ரஹானே அவுட் ஆனார். அவர் 74 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார்.

அடுத்ததாக, களத்தில் இருந்த ரோகித் ஷர்மாவுடன் கோலி கை கோர்த்தார். ரோகித் ஷர்மா அபாரமாக விளையாடி 125 ரன்களைக் குவித்தார். 109 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் ஷர்மா 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை விளாசி 125 ரன்களை சேர்த்தார். இந்திய அணி 223 ரன்களை எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா அவுட் ஆனார்.

களத்தில் இருந்த விராட் கோலியும் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 39.4 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் ஜாதவ், மணீஷ் பாண்டே இருந்தனர். 42.5வது ஓவரில் வெற்றி இலக்கான 243 ரன்களை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்த தொடரை இந்தியா வென்றது.

இதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரில் முதல்தர வரிசையை இந்தியா தக்கவைத்துள்ளது. ஆட்ட நாயகனாக ரோகித் ஷர்மாவும், தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வாகியுள்ளனர்.

Previous Post

பாண்டியா தொடர் நாயகன்!

Next Post

ஹப்புத்தளை விபத்தில் இருவர் பலி!

Next Post
ஹப்புத்தளை விபத்தில் இருவர் பலி!

ஹப்புத்தளை விபத்தில் இருவர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures