லண்டன் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பான 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்ட் கவுன்டியின் டோவர் துறைமுகப் பகுதியில் இன்று காலை சுற்றித் திரிந்த அந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி பெருநகர காவல்துறை அதிகாரி நீல் பாசு கூறுகையில், “இன்று காலை எங்கள் விசாரணையில் குறிப்பிடத்தக்க கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த முன்னேற்றம் மகிழ்ச்சி அளித்தாலும், அச்சுறுத்தல் நிலை இன்னும் மோசமாக உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது” என்றார்.