Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பசில், சந்­தி­ர­சிறி இணைந்து அடுத்த வாரம் யாழ்.வருகை

September 17, 2017
in News, Politics
0
பசில், சந்­தி­ர­சிறி இணைந்து அடுத்த வாரம் யாழ்.வருகை

முன்­னாள் அமைச்­சர் பசில் ராஜ­பக்ச மற்­றும் வடக்கு மாகாண முன்­னாள் ஆளு­நர் மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி ஆகி­யோர் அடுத்த வாரம் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரு­கின்­ற­னர்.
முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தரப்­பால் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட பொது­ஜன மக்­கள் முன்­ன­ணியை வடக்கு மாகா­ணத்­தில் காலூன்­றும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவே அவர்­கள் இரு­வ­ரும் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.
மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக்­கா­லத்­தில் அவ­ரது ஆலோ­ச­க­ரா­க­வும் அமைச்­ச­ரா­க­வும் இருந்த பசில் ராஜ­பக்­சவே, வடக்­கின் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் பொறுப்­பா­கச் செயற்­பட்­டார். வடக்­கின் வசந்­தம் என்ற பெய­ரில், எல்­லாத் திட்­டங்­க­ளை­யும் அவரே கையாண்­டார்.
அந்­தக் கால­கட்­டத்­தில் வடக்கு மாகாண ஆளு­ந­ராக இருந்த மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி, பசில் ராஜ­பக்­ச­வு­டன் இணைந்து, வடக்கு மக்­க­ளை­யும், அரச நிர்­வா­கத்­தை­யும் இரா­ணுவ ஆட்­சிப் பிடிக்­குள் வைத்­தி­ருந்­தார்.
ஆட்­சி­மாற்­றத்­துக்­குப் பின்­னர், வடக்கு அரங்­கில் இருந்து அகற்­றப்­பட்ட இவர்­கள் இரு­வ­ரும், மீண்­டும் ஒன்­றி­ணைந்து வடக்­குக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வுள்­ள­னர்.
இவர்­கள் இரு­வ­ரும் எதிர்­வ­ரும் 21ஆம் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்து மூன்று நாள்­க­ளுக்­குத் தங்­கி­யி­ருப்­பர். இதன்­போது, கடந்த ஆட்­சிக்­கா­லத்­தில் தமக்கு நெருக்­க­மாக இருந்­த­வர்­கள், ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்­களை அழைத்­துப் பேசத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.
மகிந்த ஆத­ரவு பொது­ஜன மக்­கள் முன்­ன­ணி­யின் யாழ்ப்­பாண அமைப்­பா­ள­ராக ஈ.பி.டி.பியின் முன்­னாள் ஆத­ர­வா­ளர் தம்­பித்­துரை ரஜீவ் நிய­மிக்­கப்­பட்­டி­ருந் தார். அவ­ரு­டன் இணைந்து மேலும் 40 பேருக்கு மகிந்த ஆத­ர­வுக் கட்­சி­யின் யாழ்ப்­பா­ணத்­துக்­கான முக்­கிய பொறுப்­புக்­க­ளும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.
அடுத்த சில மாதங்­க­ளில் நடத்­தப்­ப­ட­வுள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­தல், மற்­றும் அடுத்த ஆண்­டில் நடத்­தப்­ப­ட­வுள்ள மாகாண சபைத் தேர்­தல் ஆகி­ய­வற்றை இலக்கு வைத்தே, பசில் ராஜ­பக்ச- சந்­தி­ரி­சிறி கூட்­டணி மீண்­டும் வடக்­கில் செயற்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

வயோதிபர் தற்கொலை !!

Next Post

லண்டன் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது.

Next Post
லண்டன் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது.

லண்டன் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures