மின்சாரம் தாக்கியதில் குடும்பத் தலைவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலையில் இடம்பெற்றது. அதேயிடம் ஏ.வி.சாலையைச் சேர்ந்த தம்பையா தர்மசீலன் (வயது – 46) என்பவரே உயிரிழந்தார்.
அரியாலையிலுள்ள தனது பழைய வீடு ஒன்றுக்கு மின்னிணைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே அவர் மின்சாரத்தால் தாக்கப்பட்டார் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை இடம்பெறுவதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.