Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20ஐ அரசு கைவிட்­டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல்

September 17, 2017
in News, Politics
0

அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் நிறை­வேற்­றப்­ப­டுமா இல்­லையா என்­பது தொடர்­பான குழப்­பம் தோன்­றி­யுள்­ள­போ­தும் திருத்­தம் கைவி­டப்­பட்டுத் தேர்­தல் நடத்­தப்­ப­டும் சூழல் ஏற்­பட்­டால் எதிர்­வ­ரும் டிசெம்­பர் 9ஆம் திகதி தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்று தெரி­கி­றது.
‘‘அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் கைவி­டப்­பட்­டால் கிழக்கு, வட­மத்தி, சப்­ர­க­முவ மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல் டிசெம்­பர் 9ஆம் திகதி நடத்­தப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு அதி­கம். அதற்­குத் தேர்­தல்­கள் திணைக்­க­ளம் தயா­ராக இருக்­கின்­றது” இவ்­வாறு மேல­தி­கத் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் எம்.எம்.மொஹ­மட் ‘உத­யன்’ பத்­தி­ரி­கைக்­குத் தெரி­வித்­தார்.
இலங்கை அரசு அனைத்து மாகாண சபை­க­ளுக்­கும் ஒரே நாளில் தேர்­தல் நடத்­தும் நோக்­கு­டன் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவை முன்­வைத்­தது. இதற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. உயர் நீதி­மன்­றம், 20ஆவது திருத்­தச் சட்­டத்தை நிறை­வேற்ற பொது­வாக்­கெ­டுப்பு நடத்­த­வேண்­டும் என்று தனது விளக்­கத்தை சபா­நா­ய­க­ருக்­கும், அரச தலை­வ­ருக்­கும் அனுப்பி வைத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது.
அதைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்­தல்­களை நடத்­தியே ஆக­வேண்­டிய கட்­டா­யத்­திற்கு அரசு தள்­ளப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. ஆனால், அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத்தை மீண்­டும் திருத்தி அதனை நிறை­வேற்­று­வ­தற்­கான முயற்­சி­க­ளில் அரசு ஈடு­ப­டு­வ­தா­க­வும் கொழும்பு அர­சின் தக­வல்­கள் கூறு­கின்­றன. இந்த நிலை­யில் தேர்­தலை நடத்­த­வேண்­டிய நிலை ஏற்­பட்­டால் அதற்­குத் தாம் தயா­ரா­கவே இருப்­ப­தா­கத் தேர்­தல்­கள் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. இது குறித்து மேல­தி­கத் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் தெரி­வித்­த­தா­வது:
நாடா­ளு­மன்­றத்­தில் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு நிறை­வேற்­றப்­பட்­டால் மாத இறு­தி­யில் கலைக்­கப்­ப­டும் மூன்று மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தல் நடை­பெ­றாது.
தேர்­தல் சட்­ட­வ­ரைவு நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லை­யா­யின், எதிர்­வ­ரும் 26ஆம் திகதி சப்­பி­ர­க­முவ மாகாண சபை, 30ஆம் திகதி கிழக்கு மாகாண சபை, ஒக்­ரோ­பர் முத­லாம் திகதி வட­மத்­திய மாகா­ண­சபை என்­பன கலைக்­கப்­ப­டும்.
1988ஆம் ஆண்டு 2ஆம் இலக்க மாகாண சபை­கள் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில், மாகாண சபை­கள் கலைக்­கப்­பட்டு ஒரு வார காலத்­தி­னுள் வேட்­பு­மனு கோரப்­பட வேண்­டும். 26ஆம் திகதி கலைக்­கப்­ப­டும் சப்­பி­ர­க­முவ மாகா­ண­ச­பைக்கு ஒக்­ரோ­பர் 3ஆம் திக­திக்கு முன்­னர் வேட்­பு­மனு கோரு­தல் வேண்­டும். இதற்கு அமை­வாக மூன்று மாகாண சபை­க­ளுக்­கும் ஒக்­ரோ­பர் 2ஆம் திகதி வேட்­பு­மனு கோரப்­ப­டும்.
ஒக்­ரோ­பர் மாதம் 16ஆம் திகதி அல்­லது 23ஆம் திகதி நண்­ப­கல் 12 மணி­யு­டன் வேட்­பு­ம­னுத் தாக்­கல் முடி­வ­டை­யும். வேட்­பு­ம­னுத் தாக்­கல் முடி­வ­டைந்­த­தும் மிக விரை­வாக தேர்­தல் தினம் குறித்த வாக்­கெ­டுப்பு அறி­விப்பை தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் (மாவட்­டச் செய­லர்) வெளி­யிட வேண்­டும்.
வேட்­பு­ம­னுத் தாக்­கல் முடி­வ­டைந்­த­தி­லி­ருந்து, தேர்­தல் திக­தி­யா­னது 5 வாரத்­துக்கு குறை­ய­த­தா­க­வும் 8 வாரத்­துக்கு மேற்­ப­டா­த­தா­க­வும், சனிக்­கி­ழமை நடத்­தக் கூடி­ய­தா­க­வும் இருக்­க­வேண்­டும்.
இத­ன­டிப்­ப­டை­யில் டிசெம்­பர் மாதம் 2, 9, 16ஆம் திக­தி­கள் பொருத்­த­மாக உள்­ளன.
டிசெம்­பர் முத­லாம் திக­தி­யும், மூன்­றாம் திக­தி­யும் விடு­முறை தின­மாக இருப்­ப­தால் டிசெம்­பர் 2ஆம் திகதி தேர்­தலை நடத்த முடி­யாது.
டிசெம்­பர் 16ஆம் திகதி, ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்சை நடை­பெ­றும் என்­ப­தால் அன்­றைய தின­மும் தேர்­தலை நடத்த முடி­யாது. எனவே டிசெம்­பர் 9ஆம் திக­தியே மூன்று மாகாண சபை­க­ளுக்­கும் தேர்­தலை நடத்த முடி­யும் என்­றார்.

Previous Post

சிரிய எல்லையில் ஐஎஸ்-க்கு எதிராக ஈராக் தேடுதல் வேட்டை

Next Post

மின்­சா­ரம் தாக்கி குடும்பத் தலை­வர் உயி­ரி­ழந்­தார் : அரி­யா­லை­யில் பரி­தா­பம்

Next Post
மின்­சா­ரம் தாக்கி குடும்பத் தலை­வர் உயி­ரி­ழந்­தார் : அரி­யா­லை­யில் பரி­தா­பம்

மின்­சா­ரம் தாக்கி குடும்பத் தலை­வர் உயி­ரி­ழந்­தார் : அரி­யா­லை­யில் பரி­தா­பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

July 14, 2026
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

July 14, 2026
விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures