Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்!

September 16, 2017
in World
0
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்!

தூத்துக்குடியில் தங்குகடல் முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்திலுள்ள விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று பிடித்து வரப்படும் மீன்கள் ஏலமுறையில் தமிழ்நாட்டுக்குள் மட்டுமல்லாமல் மற்ற அண்டை மாநிலங்களுக்கும் நல்ல விற்பனை ஆகிறது. இந்த மீன்பிடித்துறைமுகம் மூலம் 240 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். தற்போது அதிகமாக மீன் வரத்து இல்லாததால் தங்குகடலில் மீன்பிடிக்க அரசு அனுமதி கோருகின்றனர் மீனவர்கள்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர்களிடம் பேசியபோது, ‘’தினமும் அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்குள்ளாக கரைக்கு திரும்பி விடவேண்டுமென்பது அரசு மீன்வளத்துறையின் சார்பில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறை. இரவு 9 மணிக்கு மேல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவோ, தங்குகடலில் மீன்பிடிக்கவோ அனுமதியில்லை. சில நாள்களில் ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட கடல் எல்லைப் பகுதிக்குள் இரவில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துச் செல்கின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தற்போது மீன்வரத்து குறைந்துள்ளதால் அரசு விதித்துள்ள காலை 5 மணி முதல் 9 மணிக்குள்ளாக கடலுக்குள் சென்று மீன் பிடித்துவருவதால் கிடைக்கும் வருமானம் விசைப்படகுக்கான டீசல், மற்ற மீன்பிடி வேலையாட்கள் கூலி ஆகியவற்றுக்கே போதுமானதாக உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக 80 முதல் 100 விசைப்படகுகளே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று வருகின்றன. இரவில் தங்குகடலில் படகில் தங்கி மீன் பிடித்தால் மட்டும்தான் கட்டுப்படியாகும்.

இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. மற்ற மாவட்ட மீனவர்களைப் போல எங்களுக்கும் தங்குகடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்கிட வேண்டும். தங்குகடல் அனுமதி இல்லாவிட்டால் கடலுக்குள் சென்று வருவதே லாபமில்லாமல் இருக்கும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒருநாள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.’’ என்றனர்.

விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 240 விசைப்படகுகளும் மீன்பிடித்துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன் ஏலக்கூடமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Previous Post

கார், பைக் வைத்திருப்பவர்கள் ஏழைகளா? – மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Next Post

மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி 1100 கி.மீ தூரம் மாணவர்கள் சைக்கிள் பயணம்

Next Post
மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி 1100 கி.மீ தூரம் மாணவர்கள் சைக்கிள் பயணம்

மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி 1100 கி.மீ தூரம் மாணவர்கள் சைக்கிள் பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures