சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கைகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடும் வரை 2017 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த இடைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வாவின் தலைமையில், உயர் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளின் செயலாளர்கள், சட்டமா அதிபரின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழு 2017 செப்டெம்பர் 11 ஆம் திகதி அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. இக்குழு 10 நாள் காலப்பகுதியில் இலங்கை வைத்திய சங்கம், பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள், மருத்துவ தொழில்வல்லுநர்கள், விரிவுரையாளர்கள் சங்கம், பெற்றோர் பிரதிநிதிகள், சைட்டம் முகாமைத்துவ பிரதிநிதிகள் போன்ற தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளது. இக்குழுவே ஆட்சேர்ப்பை நிறுத்துமாறு பரிந்துரை செய்துள்ளது.
உயர்கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் இப்பரிந்துரையின் தீர்மானத்தை சைட்டம் நிறுவனத்திற்கு விசேட கல்லூரிகள் சட்டத்தின் 70வது பிரிவின் கீழ்நேற்று அறிவித்துள்ளார்.