பஹ்ரைன் நாட்டில் இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கு பஹ்ரைன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பஹ்ரைனில் இதுவரை சுமார் 11 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் பஹ்ரைன் அரசாங்கத்தின் பாராட்டை தெரிவித்துக்கொள்கின்றேன் என பஹ்ரைன் தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜமீல் பின் முஹம்மத் கூறியுள்ளார்.
அத்துடன், அவர்களின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள பஹ்ரைன் நாட்டின் தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போதே பஹ்ரைன் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.