இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளினால் உருவாக்க முயற்சிக்கின்ற இனப் பிரச்சினை, மதப்பிரச்சினை மற்றும் மொழிப் பிரச்சினை என்பவற்றை முறியடித்து இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனையை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
புத்தரின் போதனையை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதற்கான அடையாளச் சின்னம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகும். இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியம் இன்று சிலருக்கு இல்லாதுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு கிடைத்துள்ள இறுதி அவகாசமே இந்த நல்லாட்சி அரசாங்கமாகும் எனவும் பிரதமர் தெரிவித்தள்ளார்.