ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரான தமது முதல் நாள் போராட்டம் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தொழிலாளர் சட்டமூலத்தில் மக்ரோன் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், அது தொழிலாளர்களுக்கு திருப்திகரமானது இல்லை என தொழிற்சங்க அமைப்புகள் முன்னதாக தெரிவித்து, நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதாக அறிவித்தன.
அதைத் தொடர்ந்து நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், உள்துறை அமைச்சர் தெரிவித்த தகவலின் படி 2,23,000 பேரும் தொழிற்சங்க அமைப்பு தெரிவித்த தகவலின் படி 400,000 பேரும் ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டுள்ளனர். மேலும், ‘இது மக்ரோனுக்கு எதிரான எங்களுடைய மிகப்பெரிய வெற்றி!’ என CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை, Paris, Marseille, Nantes ஆகிய நகரங்களில் சில மோதல்கள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பிரதமர் எத்துவா பிலிப் தெரிவிக்கும் போது, ‘நாங்கள் தொழிலாளர்களின் கவலைகளை கேட்டுக்கொண்டிருந்தோம். அதில் சிலவற்றை கலந்துரையாட வேண்டிய தேவை உள்ளது.’ என குறிப்பிட்டார்.
