மாத்தளை, பல்லேபொல இராணுவ ஒன்றியத்தின் தலைவர் டபிள்யு.ஏ.ஜி.சரத் குணவர்தன நேற்று (10) தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுத்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இவர் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளார்.
ஊடகங்களுக்கு தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்புச் செய்த பின்னர், கருத்துத் தெரிவிக்கையில், இராணுவ சேவை அதிகார சபையின் தலைமைப் பதவியிலிருந்து சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள இராணுவ ஒன்றியங்களின் அதிகாரிகளும் இவ்வாறு இராஜினாமா செய்யுமாறும், மாத்தளை பல்லேபொல இராணுவ ஒன்றியத்தின் தலைவர் டபிள்யு.ஏ.ஜி. சரத் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.