இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று(09) இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மத்தள விமான நிலைய விவகாரம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கூட்டு முயற்சியில் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது