மஹிந்தவின் அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது வரிச் சுமையை செலுத்தி விட்டே பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய திட்டங்களுக்காக கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் கடன்கள் பெறப்பட்டன. இந்த அரசாங்கமும் கடன்களைப் பெற்று அவற்றை மக்கள் மீது சுமத்திவருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றுக்கொள்ளப்படும் கடன்களால் மக்களுக்கு ஏதும் நன்மைகள் ஏற்படவில்லை. கடன்சுமைகளும் மக்கள் மீதே சுமத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அதுபற்றி விவாதம் நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
