யாழ் நகருக்கு அண்மையாக உள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு வாங்கப்பட்ட பார்சல் ஒன்றில் பல்லி இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் நேற்றிரவு தமது பிள்ளைகளுக்கு வாங்கிய ப்றைட்றைஸ் உணவுப் பார்சலில் இறந்த பல்லி ஒன்று காணப்பட்டதாக ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதா அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுத்தார்களா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை