யாழ் பல்கலைக் கழக பெண் ஊழியர் ஒருவருடன் பல்கலைக் கழக நிர்வாக அதிகாரிகள் இருவர் தகாத முறையில் நடந்த கொண்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலையில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது .
இந்தச் சம்பவம் குறித்து யாழ் பல்கலை ஊழியர்கள் சங்கம் இன்று 8 ஆம் திகதி காலை நடத்தவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தருமாறு கோரி நேற்று மாலை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருடன் இரு நிர்வாக அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பதாக தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர் .
அவர்கள் மீது இதுவரை பல்கலைக் கழக நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையைக் கண்டித்தும் அவர்கள் மீது உடனடியாக எவ்வித பாரபட்சமும் இன்றி உடன் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மேற்படி பணிப்பகிஷ்கரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் பல்கலை ஊழியர்கள் சங்கத்தினால் இன்று காலை 10 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலை ஊழியர்கள் சங்கம் இன்று காலை வெளியிட்ட பணிப்பகிஷ்கரிப்பு குறித்த அறிவித்தல் உங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.