பளை – வேம்பொடுகேணிப் பகுதியில் பாரிய சேதத்தை ஏற்ப்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதனால் பரபரப்பான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பணிகளில் ஈடுபட்டிருந்த வெடிபொருள் அகற்றும் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திராபுரம், வேம்பொடுகேணி, இத்தாவில், செல்வபுரம், கச்சார்வெளி போன்ற கிராம மக்களை குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மக்களுக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குண்டு புதைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் சுமார் 546 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த குண்டினை வெடிக்க வைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.