மித்தெனிய பிரதேசத்தில் வீடொன்றில் சட்ட ரீதியற்ற முறையில் பணத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து 1000 ரூபா பெறுமதியான நோட்டுக்கள் 245 மற்றும் 5000 ரூபா பெறுமதியான நோட்டுக்கள் 41 உடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பிரதேசத்தில் புகைப்படங்கள் அச்சிடும் நிறுவன உரிமையாளர் ஒருவர் மூலமே குறித்த பணத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி குறித்த நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து பணம் அச்சிட்ட இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













