Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரிக்கு இணையாக மகிந்தவுக்கும் இடஒதுக்கீடு

September 3, 2017
in News, Politics
0

பொரளை கேம்­பல் மைதா­னத்­தில் இன்று இடம் பெ­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66 ஆவது மாநாட்­டுக்­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் மேடை­யில் அரசதலைவர் மைத்­திரிபால­வுக்கு இணை­யாக மகிந்­த­வுக்­கும் ஆச­னம் ஒதுக்­கப் படும். இரு­வ­ரும் சம­மா­கவே நடத்­தப்­ப­டு­வர் என்று பிரதி அமைச்­சர் நிசாந்த முத்­து­ஹெட்­டி­கம தெரி­வித்­தார்.

முன்­னாள் அரச அதி­பர் மகிந்த ராஜ­பக்­சவை இந்த மாநாட்­டுக்கு அழைத்­தி­ருப்­பது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

திரு­ம­ணத்­துக்­குத் தயா­ரா­கு­வ­து­போல் எமது கட்சி 66 ஆவது மாநாட்­டைக் கொண்­டா­டு­வ­தற்­குத் தயா­ராகு கின்­றது.எமது சுதந்­தி­ரக் கட்சி 66 ஆவது மாநாட்டை பொரளை கேம்­பல் மைதா­னத்­தில் நடத்­து­கின்­றது.70 ஆவது மாநாட்டை சுதந்­தி­ரக் கட்­சி­யின் தனி அர­சின்­கீ­ழும் மைத்­தி­ரி­யின் தலை­மைத்­து­வத்­தின் கீழுமே நடத்­து­வோம்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வை­யும் இந்­நாள் அரசதலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை­யும் ஒன்­றி­ணைக்­கும் காலம் வந்­து­விட்­டது.இந்த மாநாட்­டில் கலந்­து­கொள்­ளு­மாறு நாம் மகிந்­த­வுக்கு அழைப்பு விடுத்­துள்­ளோம்.அவரை மீண்­டும் மீண்­டும் மரி­யா­தை­யு­டன் அழைக்­கின்­றோம்.அவ­ருக்­குப் பொருத்­த­மான ஆச­னம் மேடை­யில் தயார்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

மேடை­யில் மைத்­திரி எந்த இடத்­தில் இருப்­பாரோ அதே இடத்­தில்­தான் மகிந்­த­வும் இருப்­பார்.இரு­வ­ரை­யும் ஒன்­றா­கவே நாம் பார்க்­கின்­றோம்.அவர்­கள் இரு­வர் அல்­லர்.ஒரு­வர்.ஏன் நாங்­கள் இவ்­வ­ளவு கெஞ்­சிக் கூத்­தாடி மகிந்­தவை அழைக்­கின்­றோம் தெரி­யுமா?அவர் இருப்­பது பிழை­யான இடத்­தில்.அவ­ரின் தாய் வீடு அவரை அன்­பு­டன் அழைக்­கின்­றது.

அவர் சுதந்­தி­ரக் கட்சி மாநாட்­டில் கலந்­து­கொண்­டால் மறு­நாள் விடி­யும்­வரை கைதட்டி மகிழ்ச்­சி­யைத் தெரி­விப்­போம்.அவர் ஒரு வீரர்.அவர் சுதந்­தி­ரக் கட்­சிக்­குத் திரும்­பி­விட்­டால் 2020இல் சுதந்­தி­ரக் கட்சி தனித்து ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தில் எந்­த­வொரு சிர­ம­மும் இருக்­காது.அவர் எமது சக்தி.

இரண்டு தலை­வர்­க­ளும் ஆளுக்­கொரு பக்­கத்­தில் இருந்து விளை­யாட்­டுக் காட்­டா­மல் கட்­சி­யின் நலன்­க­ருதி ஒன்­றி­ணைய வேண்­டும். கட்­சியை வெற்­றிப் பாதை­யில் இட்­டுச் செல்ல வேண்­டும் – என்­றார்.

Previous Post

மாம்பழம் பறிக்க முயன்றவர் – உயிரிழப்பு!

Next Post

அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்

Next Post
அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்

அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures