வடக்கு மாகாண சபை கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினர் தமிழ் மொழியின் தேர்ச்சிக்காக ஆசிரியர்களுக்கு 100 மணித்தியாலங்கள் கொண்ட “புலமைசார் பட்டயக் கற்கை நெறி”க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இக்கற்கை நெறி ஆசிரியர்களை மையமாகக் கொண்டு புலமைசார் பட்டயக் கல்விக்கான பாடவிதானங்களை உள்ளடக்கியதாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை 021 7900540 இலக்க தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்-ளும்படியும் விண்ணப்பங்களை தலை-வர், ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கம், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாணம், மருதனார்மடம், சுன்னாகம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படியும் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தின் செயலாளர் பண்டிதர் ம.ந. கடம்-பேசு-வரன் அறிவித்துள்ளார்.
