Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரத்தில் முடிவுக்கு வராத குழப்பம்

August 25, 2017
in News
0

வடக்கு மாகாண அமைச் சர­வைக் குழப்­பங்­கள் இப்­போ­தைக்கு முடி­வுக்கு வராது என்­பது உறு­தி­யா­கி­ யுள்­ளது. புதிய அமைச்­ச­ர­ வை­யில் உள்ள இரு­வ­ரின் பத­வி­கள் அந்­த­ரத்­தி லேயே தொங்­கிக் கொண் டி­ருக்­கின்­றன.

சுகா­தார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட ஜி.குண­சீ­ல­னுக்கு எதி­ராக ஒழுக் காற்று நட­வ­டிக்கை எடுக் கப்­ப­டும் என்று ரெலோ ­வின் செய­லா­ளர் ந.சிறி காந்தா அறி­வித்­துள்­ளார். ‘‘டெனீஸ்­வ­ர­னுக்கு ஒரு நீதி குண­சீ­ல­னுக்கு ஒரு நீதி­யாக இருக்க முடி யாது’’ என்று அவர் குறிப் பிட்­டுள்­ளார். இரு வாரங் க­ளுக்­குள் தமது அமைப் புக் கூடி இது தொடர்­பில் முடி­வெ­டுக்­கும் என்­றார் அவர்.

அமைப்பு எடுத்த ஒழுக் காற்று நட­வ­டிக்­கை­யின் கார­ண­மா­கத்­தான் அமைச் ச­ராக இருந்த பா.டெனீஸ் வ­ரன் பத­வி­யி­ழந்­தார். அவ்­வாறே ஜி.குண­சீ­ல­னும் பத­வி­யி­ழக்க நேரி­டும். அப்­போது ஏற்­ப­டும் வெற்­றி­டத்­துக்கு ரெலோ சார்­பில் க.விந்­த­னையே நிய­மிக்க வேண்­டிய நிலமை ஏற்­ப­டும்.

சுகா­தார அமைச்­சர் பத­விக்கு க.விந்­தன் பொருத்­த­மற்­ற­வர் என்று முத­ல­மைச்­சர் ஏற்­க­னவே அறி­வித்­தி­ருக்­கி­றார். இந்த நிலை­யில் சுகா­தார அமைச்­சுப் பத­வியை யார் பெறு­வர் என்­ப­தில் தொடர்ந்­தும் சிக்­கல் நீடிக்­கப்­ப­டு­கி­றது.

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் எடுத்த முடிவு கார­ண­மாக, அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­துக் கொண்­டி­ருந்த பா.டெனீஸ்­வ­ரனை, அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு ரெலோ அமைப்­புக் கோரி­யி­ருந்­தது. அவர் அதற்கு மறுத்­தி­ருந்­தார்.

ரெலோ அமைப்பு அவ­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுத்­தது. கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­து­வ­தாக அறி­வித்­தது. இந்த அறி­விப்­புக் கிடைத்­த­துமே முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ர­வை­யில் இருந்து நீக்­கி­னார்.

அந்த இடத்­திற்கு ரெலோ அமைப்பு தமது கட்சி சார்­பில் க.விந்­தனை நிய­மிக்­கு­மாறு கோரி­யது. முத­ல­மைச்­சர் அந்­தக் கோரிக்­கையை புறந்­தள்ளி அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த ஜி.குண­சீ­லனை அமைச்­ச­ராக நிய­மித்­தார்.

ரெலோ அமைப்பு அதனை ஏற்­றுக் கொள்ள முடி­யாது என்று அறி­வித்­தது. ஆனா­லும் முத­ல­மைச்­சர், கட்சி பரிந்­து­ரைக்­க­லாம், முத­ல­மைச்­சர்­தான் முடி­வெ­டுப்­பார் என்று பதில் வழங்­கி­யி­ருந்­தார்.

முத­ல­மைச்­ச­ரின் பதில் தொடர்­பி­லும், குண­சீ­ல­னின் நட­வ­டிக்கை தொடர்­பி­லும் ரெலோ­வின் செய­லா­ளர் ந.சிறீ­காந்தா தெரி­வித்­த­தா­வது:
சம­நீதி அடிப்­ப­டை­யி­லும் கட்சி கட்­டுப்­பாட்­டின் அடிப்­ப­டை­யி­லும் முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னிற்கு ஒரு நீதி அமைச்­சர் ஞா.குண­சீ­ல­னுக்கு ஒரு நீதி எனச் செயல்­ப­ட­மு­டி­யாது.

குண­சீ­ல­னுக்கு எதி­ரா­க­வும் நாம் ஒழுங்கு நட­வ­டிக்கை எடுப்­போம். எமது கட்­சி­யி­னால் அமைச்­சர் நிய­ம­னத்­திற்கு பரிந்­து­ரைத்த மாகாண சபை உறுப்­பி­ன­ருக்­குப் பதி­லாக வேறு ஒரு­வரை முத­ல­மைச்­சர் நிய­மித்­தது பார­தூ­ர­மான அர­சி­யல் தவ­றா­கும்.

அது மட்­டு­மன்றி வெந்த புண்­ணில் வேல்­பாச்­சு­வது போல் சுகா­தார அமைச்சை நிர்­வ­கிப்­ப­தற்கு ஓர் மருத்­து­வரே பொருத்­தம் என்ற நிலைப்­பாட்­டி­னை­யும் முத­ல­மைச்­சர் முன் வைத்­துள்­ளார்.

எமது கட்­சி­யா­னது முத­ல­மைச்­ச­ரி­டம் கோரி­ய­தெல்­லாம் பதவி விலக்­கப்­பட்ட டெனீஸ்­வ­ரன் வச­மி­ருந்த துறை­களை எம்­மால் பரிந்­து­ரைத்த விந்­த­னி­டம் வழங்­குங்­கள் என்­பதே. எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் நாம் சுகா­தார அமைச்­சைக் கோர­வில்லை.

தற்­போது சுகா­தார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குண­சீ­லன் உள்­பட 15 பேர் கலந்து கொட்ட எமது தலை­மைக்­கு­ழுக் கூட்­டத்­தில் சுகா­தார அமைச்சை வழங்­கி­னால் ஏற்­ப­தில்லை என்­றும் தீர்­மா­னித்­தி­ருந்­தோம்.

முத­ல­மைச்­சர் தனது முடி­விற்கு மேல­தி­க­மா­கக் கூறும் நியா­யங்­கள் வேடிக்­கை­யா­னது. அவற்­றினை விரி­வாக ஆராய விரும்­ப­வில்லை. ஆனால் முத­ல­மைச்­ச­ரின் முடி­வின் மூலம் புதி­ய­தொரு அர­சி­யல் புயல் மையம்­கொள்­வ­தற்கு வழி அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று மட்­டும் கூற­மு­டி­யும்.

இந்­தச் சூழ­லில் முத­ல­மைச்­சர் அழைத்­தார் என்­ப­தற்­காக எமது உறுப்­பி­னர் குண­சீ­லன் ஓடோ­டிச் சென்று பதவி ஏற்­றது கட்­சி­யின் கட்­டுப்­பாட்டை அப்­பட்­ட­மாக மீறிய ஓர் பொறுப்­பற்ற நட­வ­டிக்­கை­யா­கும். குண­சீ­ல­னிற்கு நட­வ­டிக்கை எடுக்­கும் நோக்­கில் கட்­சி­யின் தல­மைக்­கு­ழு­வா­னது இரண்டு வாரத்­தில் கூடும் – -என்­றார்.

இதற்­கி­டையே, எதிர்­வ­ரும் 26ஆம் திகதி வவு­னி­யா­வில் கூடு­வ­தாக இருந்த தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டம் மேலும் பின்­தள்­ளிப் போயி­ருக்­கி­றது. அந்­தக் கூட்­டம் கூட்­டப்­ப­டும்­போது அமைச்­சர் அனந்தி சசி­த­ர­னுக்கு எதி­ராக அந்­தக் கட்­சி­யும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கும்.

தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் வடக்கு மாகாண சபை­யில் அமைச்­சுப் பதவி எத­னை­யும் வகிப்­ப­தில்லை என்று எடுக்­கப்­பட்ட முடிவை மீறி­னார் என்­ப­தற்­கா­கவே அனந்தி மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரி­கி­றது. அப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டால் கட்­சி­யி­லி­ருந்து அவர் நீக்­கப்­ப­ட­வும்­கூ­டும். அப்­போது அந்த இடத்­திற்கு வேறு ஒரு­வரை நிய­மிக்க வேண்டி ஏற்­ப­டும்.

Previous Post

பேரறிவாளனுக்கு பரோலில் செல்ல அனுமதி!

Next Post

மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் என – அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க

Next Post
மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் என – அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க

மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் என - அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures