அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப் புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர் சிறைச்சாலையில் மருத் துவமனையில் நேற்றுக் காலை சேர்க்கப்பட்ட னர். மற்றையவர் சிறைச்சாலையில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வரும் தமக்கு எதிரான வழக்கை வேறு நீதி மன்றுக்கு மாற்ற வேண்டாம் எனக் கோரி, தமிழ் அரசியல் கைதிகள் மூவர் அநுராத புரம் சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களது உடல் நிலை மோசமடைந்தது. திருவருள் மற்றும் சுலக்ஸன் இருவரும் அநுராதபுரம் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுக் காலை சேர்க்கப்பட்டனர். தர்சன், தூக்குத் தண்டனைக் கைதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரும் உணவு ஒறுப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.
