பீகாரில் மழை வெள்ளம் 16 மாவட்டங்களை சூழ்ந்து காணப்படுகிறது. இதில் பல லட்சம் பேர் சிக்கி தவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 153 ஆனது.
வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்க ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளில் சென்று மீட்புப்பணி மற்றும் நிவாரணப்பணிகளில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதுவரை 4¼ லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு ஆங்காங்கே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். மழை வெள்ளத்தால் கிட்டதட்ட 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
