ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர் குமுரகுருபரன் பத்திரப்பதிவுத்துறை இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் மக்கள் தொடர்புதுறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சர்க்கரை கழக நிர்வாக இயக்குநராக அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் செயலாளராக சி.சத்யமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கனிமவள கழக மேலாண்மை இயக்குநராக மகேசன் காசிராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
