இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன், கடந்த 7 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 279 பேராக அதிகரித்துள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களில் 10 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

