உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அரசாங்கம் அறிவிக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதற்காக வேண்டி உள்ளுராட்சி சபைகள் தொடர்பிலான சட்ட மூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு தனது அறிவித்தலை விடுக்கும். பெரும்பாலும் டிசம்பர் அல்லது ஜனவரி ஆரம்பத்தில் தேர்தல் இடம்பெறலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

