Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முத­ல­மைச்­சர் விசா­ர­ணைக் குழு அறிக்­கை – அமைச்சு செய­லர்­க­ளி­டம் விளக்­கம் கேட்­கி­றார் தலை­மைச் செய­லா­ளர்

August 14, 2017
in News, Politics
0

வட மாகாண அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க முத­ல­மைச்­ச­ரால் நிய­மிக்­கப்­பட்ட குழு அமைச்­சுச் செய­லா­ளர்­கள் தொடர்­பில் அறிக்­கை­யிட்­டி­ருந்த விட­யங்­கள் குறித்து அவர்­க­ளி­டம் விளக்­கம் கோரப் பட்­டுள்­ளது.

விசா­ரணை அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­கள் தொடர்­பில் உடன் விளக்­கம் அளிக்­கு­மாறு மாகா­ணத் தலை­மைச் செய­லா­ளர் அ.பத்­தி­நா­தன் சம்­பந்­தப்­பட்ட செய­லா­ளர்­க­ளி­டம் கேட்­டுள்­ளார்.

வட மாகாண விவ­சாய அமைச்­சர் தொடர்­பில் விசா­ரணை மேற்­கொள்­கொள்­ள­வேண்­டும் என வட மாகாண சபை­யின் 2016-02-09ஆம் திக­திய 45ஆவது அமர்­வில் உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தன் வட­மா­காண சபை­யில் முன்­வைத்து நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தினை அடுத்து முத­ல­மைச்­சர் சகல அமைச்­சர்­கள் தொடர்­பி­லும் விசா­ரணை நடத்த ஓர் குழுவை நிய­மித்­தார்.

அந்­தக் குழு தனது அறிக்­கையை முத­ல­மைச்­ச­ரி­டம் கைய­ளித்­தது. அந்த அறிக்கை ஊட­கங்­க­ளில் கசிந்­ததை அடுத்­துப் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டது. அது மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வை­யில் பெரும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. இரு அமைச்­சர்­கள் முத­ல­மைச்­ச­ரின் வற்­பு­றுத்­த­லின்­படி தமது பத­வி­க­ளைத் தியா­கம் செய்­த­னர்.

ஏனைய இரு­வ­ரைப் பதவி விலக்­கு­வ­தற்­காக மற்­றொரு விசா­ர­ணைக் குழு நிய­மிக்­கப்­ப­டும் என்று முத­ல­மைச்­சர் அறி­வித்­தார். இந்­தச் சர்ச்­சை­கள் கார­ண­மாக மூன்­றா­வ­தாக சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­க­மும் பத­வி­யில் இருந்து வில­கி­னார்.

இதே­வேளை, விசா­ர­ணைக் குழு அமைச்­சர்­கள் மீது மட்­டும் குற்­றம் காண­வில்லை. அமைச்­சின் செய­லர்­க­ளும் விதி­மு­றை­களை மீறி நடந்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் அமைச்­சர்­க­ளின் அதி­கார முறை­கே­டு­க­ளுக்கு உடந்­தை­யாக இருந்­தி­ருக்­கி­றார்­கள் என்­றும் குற்­றஞ்­சாட்­டி­யது.

அறிக்­கை­யில் இரு அமைச்­சின் செய­லா­ளர்­கள் தொடர்­பி­லும் சில பரிந்­து­ரை­கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. சில விட­யங்­க­ளில் தவறு இழைத்­த­தா­கவே நேர­டி­யாக குற்­றம் சுமத்­தப்­பட்­டும் இருந்­தது. அறிக்­கை­யின் விளை­வால் ஏற்­பட்ட அர­சி­யல் களே­ப­ரங்­க­ளுக்கு நடு­வில் செய­லா­ளர்­கள் மீதான நட­வ­டிக்­கை­கள் கிடப்­பில் கிடந்­தன. இப்­போது அவர்­க­ளி­டம் விளக்­கம் கோரப்­பட்­டுள்­ளது.

நிர்­வாக நட­மு­றைக்­கேற்ப, விசா­ரணை அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­ப­டும் சகல விட­யங்­க­ளுக்­கும் தமது விளக்­கங்­களை எழுத்து மூலம் முன்­வைக்­கு­மாறு தலை­மைச் செய­லா­ளர் அ.பத்­தி­நா­தன் கேட்­டுள்­ளார்.

Previous Post

வடக்கு – கிழக்­கில் வீடு­கள் இல்­லா­தோ­ருக்­காக 50 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

Next Post

செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவாக தூபி அமைப்பு !!

Next Post
செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவாக தூபி அமைப்பு !!

செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவாக தூபி அமைப்பு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures