Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்­ச­ரவை மாற்­றம் விரை­வில் இடம்­பெ­றும் – வடக்கு முதலமைச்சர்

August 6, 2017
in News, Politics
0

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை விரை­வில் முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உறு­தி­யாக இருக்­கி­றார். அமைச்­ச­ர­வை­யைப் பற்­றிய முடி­வு­க­ளில் எவரது தலை­யீ­டும் இன்றி முடி­வெ­டுக்­கும் உரிமை தனக்கு மட்­டுமே வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளது கூட்­டத்­தில் ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­தி­னார்.

‘‘அமைச்­ச­ரவை மாற்­றம் விரை­வில் இடம்­பெ­றும். அது பகு­தி­யா­கவா, முழு­மை­யா­கவா என்­பது குறித்து இன்­னும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை‘‘ என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்­றி­ரவு தெரி­வித்­தார் முத­ல­மைச்­சர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராசா, புளொட் தலை­வர் த.சித்­தார்த்­தன், ஈபி­ஆர்­எல்­எவ் தலை­வர் க.சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன், ரெலோ அமைப்­பின் தலை­வர் செல்­வம்­அ­டைக்­க­ல­நா­தன் மற்­றும் செய­லா­ளர் ந.சிறிக்­காந்தா ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்பு முத­ல­மைச்­ச­ரின் இல்­லத்­தில் நேற்று மாலை 6 மணி­யி­லி­ருந்து இரவு 9.15 மணி வரை­யில் நடை­பெற்­றது.
இந்த நீண்ட சந்­திப்­பின் பின்­னர் ஊட­கங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கருத்­துத் தெரி­விப்­பார் என்று கூறி விட்டு எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் புறப்­பட்­டுச் சென்­றார். முத­ல­மைச்­சர் ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­த­தா­வது:

இன்­றைய (நேற்­றைய) கூட்­டத்­தில் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன் வர­மாட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இருப்­பி­னும் நான் அவரை வரு­மாறு அழைத்­தேன். அவர் வந்­தார். என் மீது அவர் வைத்­துள்ள மதிப்பை அது காட்­டு­கின்­றது.

கூட்­டத்­தில், தமிழ் மக்­க­ளின் நலன் கரு­திப் பின்­வ­ரும் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ளோம். முத­ல­மைச்­சர் தனக்­கி­ருக்­கும் சட்­ட­ரீ­தி­யான தற்­து­ணிபு அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி அமைச்­ச­ரவை மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவோ திருத்தி அமைப்­ப­தற்கோ அங்­கத்­து­வக் கட்­சி­கள் சம்­ம­தத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றன.
அமைச்­சர்­கள் மாற்­றப்­பட்­டால் அது குறித்த அமைச்­சர்­கள் குற்­றம் இழைத்­தார்­கள் என்று அர்த்­தப்­ப­டாது.
அமைச்­ச­ரவை நிய­ம­னங்­க­ளைப் பொறுத்­த­மட்­டில் அங்­கத்­து­வக் கட்­சி­க­ளின் ஆலோ­ச­னை­க­ளை­யும் கருத்­தில் எடுத்து அவை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது – என்­றார்.

இதே­வேளை, அமைச்­ச­ர­வை­யைப் பற்றி முடி­வெ­டுக்­கும் உரிமை தனக்கு மட்­டுமே இருக்­க­வேண்­டும் என்­ப­தில் முத­ல­மைச்­சர் விடாப்­பி­டி­யாக இருந்­தார் என்று உத­யன் அறிந்­தது. அதே­நே­ரத்­தில் தனக்கு எதி­ரா­ன­வர்­கள் என்று அவர் கரு­தும் சிலரை எந்­தக் கார­ணம் கொண்­டும் அமைச்­ச­ர­வை­யில் சேர்த்­துக்­கொள்­ள­மாட்­டார் என்­ப­தை­யும் அவர் ஆணித்­த­ர­மாக இந்­தக் கூட்­டத்­தில் எடுத்­து­ரைத்­தார். ‘‘யார் பரிந்­து­ரைத்­தா­லும் அந்த 5 பேரில் எவ­ருக்­கும் அமைச்­சர் பதவி கொடுக்­க­மாட்­டேன்‘‘ என்­றார் அவர்.

இது கூட்­டத்­தில் பலத்த சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யது. முதல்­வ­ரின் பிடி­வா­தத்தை அடுத்­தும், அமைச்­ச­ரவை விட­யத்­தில் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் ஆலோ­ச­னையை ஏற்­ப­தற்கு அவர் தயா­ரில்­லாதை அடுத்­தும் அவர் பிடி­வா­தம் பிடிப்­ப­தைப்­போன்றே அமைச்­சர்­களை நிய­மிக்­கும் அவ­ரது உரி­மையை அங்­கீ­க­ரிப்­பது என்று கட்­சி­க­ளின் தலை­வர்­கள் முடி­வெ­டுத்­தார்­கள்.

Previous Post

தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்

Next Post

அதிரடிப்படையினரின் கைதுகள் – நேற்றும் 12 பேர் கோண்டாவிலில் கைது .

Next Post
அதிரடிப்படையினரின் கைதுகள் – நேற்றும் 12 பேர் கோண்டாவிலில் கைது .

அதிரடிப்படையினரின் கைதுகள் - நேற்றும் 12 பேர் கோண்டாவிலில் கைது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures