Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எடப்பாடி பழனிசாமி நடத்தும் கூட்டம்: பலத்தை காட்டவா, பணிந்துபோகவா?

August 1, 2017
in News, World
0
எடப்பாடி பழனிசாமி நடத்தும் கூட்டம்: பலத்தை காட்டவா, பணிந்துபோகவா?

அ.தி.மு.க.வின் அதிகார சக்தியாக இனி யார் இருக்கபோகிறார்கள் என்ற கேள்விக்கான விடையை நோக்கி அ.தி.மு.க வின் மூன்று அணிகளும் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் அடுத்தடுத்த திருப்பங்களை அ.தி.மு.க.சந்திக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எடப்பாடி தலைமையிலான அரசுக்குக் கொடுத்த கெடு முடிவடையும் நேரம் வந்துவிட்ட நிலையிலும் இரு அணிகளின் இணைப்பில் எந்த முன்னேற்றமும் தென்படாததால், அ.தி.மு.கவில் தனது அதிகாரத்தை ஆழமாக ஊன்றும் முடிவுக்கு வந்துள்ளார் தினகரன் என்கிறார்கள். அதற்கு முன்னேற்பாடாகவே எடப்பாடி அணியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் வேலையைக் கடந்த இரண்டு மாதங்களாகவே செய்துவந்தார் அவர். தினகரன் பக்கம் கணிசமான எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களை வைத்து ஆட்டம் காட்டலாம் என்று ஆரம்பத்தில் கணக்கு போட்டார் தினகரன். ஆனால், அவருக்கு செக் வைக்க முடிவு செய்த எடப்பாடி, தனக்கு வேண்டியவர்கள் மூலம் திவாகரனுக்குத் தூது அனுப்பினார். திவாகரன் தன்பக்கம் இருக்கின்றார் என்பது போன்ற ஒரு பிம்பத்தை தினகரன் தரப்புக்குக் காட்டத் தொடங்கினார். இதனால் தினகரன் தரப்பு டென்ஷனானது. ஆனால், தினகரனின் மாமியார் சந்தான லெட்சுமியின் மறைவிற்கு வந்த திவாகரனும் தினகரனும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு குடும்ப உறவுகளிடையே மீண்டும் உறவு துளிர்க்க காரணமானது. இதுதான் எடப்பாடி அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தியது.

தினகரன் ஆதரவோடுதான் முதல்வர் பதவியில் ஏறினார் எடப்பாடி. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆதிக்கத்தை ஆட்சியில் பரவலாக்கத் தொடங்கியதோடு அடுத்த குறியாக கட்சி மீதும் கவனம் செலுத்தத்துவங்கினார். தினகரனுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்களைத் தன் பக்கம் இழுக்கும் வேலையைக் கச்சிதமாக செய்துமுடித்ததும், எம்.எல்.ஏ-க்களின் பக்கம் அவர் கவனம் சென்றது. அதே நேரம் சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வருவதை பா.ஜ.க விரும்பாதது அவருக்குக் கட்சியை தான் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை அதிகமாக விதைத்தது. அதற்கேற்றபடி கொஞ்சம் வளைவு நெளிவோடு எடப்பாடி நான்காண்டு ஆட்சியைக் காப்பாற்ற பி.ஜே.பி.யின் நிழலில் இருப்பதே உத்தமம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

எடப்பாடியின் இந்த முடிவு மன்னார்குடி குடும்ப உறவுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்ற சிந்தனையில் அவர்கள் இறங்கியுள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படியே தினகரன் துணைபொதுச்செயலாளர் என்ற முறையில் வரும் 5-ம் தேதி அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்தக் கூட்டத்தை வெற்றிகரமாக தினகரன் நடத்திமுடித்துவிட்டால், கட்சி தினகரன் கட்டுப்பாட்டில் இருப்பதாக கட்சியினர் முடிவு செய்துவிடுவார்கள் என்று எடப்பாடி தரப்பு அஞ்சியே, அவசர அவசரமாக அமைச்சசர்கள் சிலருடன் ரகசிய ஆலோசனை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று மாலை அனைத்து மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அனைவருக்கும் எடப்பாடி தரப்பு அழைப்பு அனுப்பியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. குறிப்பாக தினகரன் தரப்பிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அ.தி.மு.கவின் செயற்குழு கூடி ஆறுமாதங்களைக் கடந்துவிட்டதால் அதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சில அமைச்சர்கள், சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் பிரச்னை இருக்காது. ஓ.பி.எஸ் அணியும் தாமாக இணைந்துவிடும், சின்னத்தையும் கைப்பற்றிவிடலாம் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆனால், “சசிகலா தரப்பை நீக்குவதில் சட்டச் சிக்கல் பல உள்ளன. தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்த பிரமாணப் பத்திரத்தில் நாம்தான் அவர்களுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளோம். இப்போது நாமே நீக்குவதாக அறிவிக்க முடியாது” எனச் சிலர் எடுத்து சொல்லியுள்ளார்கள்.இதனால் தினகரன் கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற அறிவிப்பினை இந்தக் கூட்டத்தில் எடுக்கலாம். சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் தொடரட்டும், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குப் பிறகு சசிகலா விவகாரத்தைப் பார்த்து கொள்ளலாம் போன்ற விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்படவுள்ளன.அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பும் இந்தக் கூட்டமுடிவில் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

அதே நேரம் தினகரன் தரப்பிற்கு தன்னுடை பலம் என்ன என்பதை காட்டுவதற்கே இந்தக் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் தினகரன் பக்கம் இருந்த சில எம்.எல்.ஏ-க்களும் கலந்து கொள்ளும் வேலையையும் எடப்பாடி தரப்பு விறுவிறுப்பாக செய்துவருகிறது. அ.தி.மு.கவின் அதிகார மையம் யார் என்பதை நிரூபிக்கவே இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது என்கிறார்கள்.

5-ம் தேதி க்ளைமேக்ஸ்…அ.தி.மு.க தலைமைக்கழகம் மீண்டும் ஒரு கலவரத்தை சந்திக்குமோ எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நடுநிலையான கட்சித்தொண்டர்கள்!

Previous Post

தமிழக அரசுக்கு மீனவர்கள் முக்கிய கோரிக்கை!

Next Post

தொடக்க வீரர் என்றால் அடி வாங்கத்தான் வேண்டும்: தெ.ஆ. வீரர் டீன் எல்கர்

Next Post
தொடக்க வீரர் என்றால் அடி வாங்கத்தான் வேண்டும்: தெ.ஆ. வீரர் டீன் எல்கர்

தொடக்க வீரர் என்றால் அடி வாங்கத்தான் வேண்டும்: தெ.ஆ. வீரர் டீன் எல்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures