Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலம்பெயர் இலங்கையர் முதலீடுகளைச் செய்ய ஆர்வம்: மங்கள சமரவீர

July 29, 2017
in News, Politics
0
புலம்பெயர் இலங்கையர் முதலீடுகளைச் செய்ய ஆர்வம்: மங்கள சமரவீர

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விடயத்தில் இலங்கையிலிருந்து சென்ற புலம்பெயர்ந்தோர் (டயஸ்போறாஸ்) முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
“சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான வரவு- செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்காக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்திக்கான திட்டத்தில் இளைஞர்களை இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “1977 மறுமலர்ச்சியின் 40 ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் இத்தருணத்தில் நாட்டின் எதிர்கால பொருளாதாரம் குறித்த இத்திட்டத்தை விளக்கமளிப்பதற்கு இங்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

77 பொருளாதார மறுமலர்ச்சியின் முன்னோடிகளின் ஒருவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்குகொள்ளும் இந்த நிகழ்வில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

1977ஆம் ஆண்டு பொருளாதார மறுமலர்ச்சி இலங்கையில் ஆரம்பமானது. இந்த காலப்பகுதியில் இந்தியா சீனா போன்ற நாடுகள் இலங்கையிலும் பார்க்க பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்டன. ஆனால் இன்று இலங்கையிலும் பார்க்க இந்த நாடுகள் பொருளாதார ரீதியில் வல்லரசுகளாக மேம்பட்டுவருகின்றன.

1977ஆம் ஆண்டு ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கு பின்னர் இந்தியா போன்ற நாடுகளிலும் பார்க்க வர்ணத் தொலைக்காட்சி கையடக்கத் தொலைபேசிகள் இலங்கையிலேயே முதன் முதலில் அறிமுகமாகின. இந்த பொருளாதார மறுமலர்ச்சி திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் கைவிடப்பட்டது.

2015ஆம் ஆண்டில் நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது வீழ்ச்சிகண்ட சீர்குலைந்த நாட்டின் கடன்சுமையையே நாம் பொறுப்பேற்கவேண்டியிருந்தது. பிராந்திய ரீதியில் மிகக்குறைந்த வருமானத்தை கொண்ட நாடாக இலங்கை அப்போது காணப்பட்டது.

2005ஆம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு காலவரையில் முறையற்ற திட்டங்களுக்கு பெற்ற வெளிநாட்டு கடன்சுமையுடன் நாடு மிகவும் மோசமானநிலையில் காணப்பட்டது. மீதொட்டமுல்லயில் குவிந்துகிடந்த குப்பைமேடுபோன்று கடன்சுமையுடன் நாட்டை சமகால அரசாங்கம் சுமக்கவேண்டியேற்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில் 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார திட்டங்களினால் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட சவால்கள் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்தது. இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் உள்ளது.

சர்வதேச ரீதியிலான வர்த்தக சவால்களை முகங்கொடுக்ககூடிய வகையில் பொருளாதார திட்டங்கள் சமகால அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மகாவலித்திட்டமே நாட்டின் இறுதியாக கொள்ளப்பட்ட பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டமாகும்.

இதற்கு பின்னர் நாளை ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம் கைச்சாத்திடப்படுகின்றது. இது இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மற்றுமொரு மைல்க்கல்லாக அமையும்.

வெளிநாடுகளுக்கு சென்று குறைந்த வருமானத்தை பெற்று எமது நாட்டவர்கள் அங்கு கஷ்டப்படுகின்றனர். நாட்டிலேயே கூடுதலான வருமானத்தை பெறக்கூடிய வகையில் பொருளாதாரத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளன.” என்றுள்ளார்.

Previous Post

சமஷ்டித் தீர்வுக்கு இணங்காவிடில் பிரிந்து வாழ இடமளிக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

Next Post

தமிழரசுக் கட்சியின் முறைகேடான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்!

Next Post
தமிழரசுக் கட்சியின் முறைகேடான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்!

தமிழரசுக் கட்சியின் முறைகேடான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures