Easy 24 News

வாகன சாரதிகளே உங்கள் வாகனத்தின் எரிவாயு தொட்டிகளை நிரப்புங்கள். நடு இரவு எரிவாயு விலை 6-சதங்கள் உயர்கின்றது.!

செவ்வாய்கிழமை மாலைக்கு முன்னராக சாரதிகள் தங்கள் வாகனத்தின் எரிவாயு தொட்டிகளை  நிரப்பி கொள்ளுமாறு எரிவாயு விலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எரிவாயு விலை லிட்டர் ஒன்றிற்கு நாளை முதல் 6-சதங்கள் அதிகரிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்டர் 115.9சதங்களிலிருந்து 121.9சதங்களாக உயர்கின்றது. இது மிகவும் விலையுயர்ந்த ஆண்டாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
பருவகால காரணிகள் மற்றும் கார்பன் விலை மாற்றங்களால் எரிவாயு விலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கடந்த ஐந்து வருடங்களாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்வடைந்து பீப்பாய் ஒன்று 56 டொலர்களை எட்டியுள்ளது.
2014 அக்டோபரில் எரிவாயு விலை அதிகரிக்க ஆரம்பித்ததுள்ளதை ரொறொன்ரோ மக்கள் காணக்கூடியதாக இருந்துள்ளது. அந்த ஆண்டின் கோடைகாலத்தில் சராசரி விலை லிட்டர் ஒன்று 141-சதங்களை எட்டியிருந்தது.
ஒன்ராறியோவின் வரையறை-மற்றும்-வர்த்தக திட்டம் எரிவாயு விலையை லிட்டர் ஒன்று4.3சதங்களால் உயர்த்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் எரிவாயு விலை லிட்டர் 12-சதங்கள் அதிகரித்துள்ளது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *