Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எந்த நேரத்திலும் கைது பீதியில் 5 மூத்த அரசியல்வாதிகள், 20 அதிகாரிகள்:

January 11, 2017
in News
0

எந்த நேரத்திலும் கைது பீதியில் 5 மூத்த அரசியல்வாதிகள், 20 அதிகாரிகள்: வெளியான பகீர் தகவல்

ஊழல் முறைகேடுகளில் கிடைத்த பணத்தை பங்கு போட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்த தமிழக அரசியல்வாதிகள் 5 பேர் மற்றும், அதிகாரிகள் 20 பேர் விரைவில் கைதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபை தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் ரூ4.8 கோடி கணக்கில் வராத பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

அப்போது அன்புநாதன் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் அன்புநாதன் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு பினாமியாக செயல்பட்டார்; அவர்களது பணம் சட்டவிரோதமாக எப்படியெல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடித்தனர். பின்னர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை கையிலெடுத்தனர்.

இந்த நிலையில் சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூ2,000 நோட்டுகளாக மாற்றிய விவகாரத்தில் தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டரான போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் அன்புநாதன் மற்றும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்குமான தொடர்பு குறித்தும் ஏராளமான தகவல்களை வருமான வரி, அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.

அத்துடன் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ், அவரது மகன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.

தலைமை செயலகத்தில் ராமமோகன் ராவ் அறையில் பதுக்கி வைக்கப்பட்ட முக்கியமான 2 செல்போன்களும் சிக்கின.

மேலும் மும்பையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவருக்காக ரூ1,700 கோடி மதிப்பிலான கட்டிடம் வாங்கப்பட்டதும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பரஸ்மால் லோதாவும் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் தமிழகத்தின் 5 மூத்த அரசியல்வாதிகள், 20 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கப் பிரிவு வலைவிரித்து வைத்திருக்கிறது. ஊழல் முறைகேடுகள் மூலம் கிடைத்த பல்லாயிரம் கோடி ரூபாயை பங்கு போட்டு கபளீகரம் செய்த இந்த அரசியல்வாதிகள் ப்ளஸ் அதிகாரிகள் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் அமலாக்கப் பிரிவிடம் சிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சேகர் ரெட்டி, பரஸ்மால் லோதா, மனோஜ்குமார் கார்க் ஆகியோரிடம் முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகள் ப்ளஸ் அதிகாரிகளை குறி வைத்து அடுத்த வேட்டையை தொடங்க இருக்கிறது அமலாக்கப் பிரிவு. எந்த நேரமும் தாங்கள் சிக்க நேரிடும் என்பதால் இந்த கோஷ்டி பெரும் பீதியில் உறைந்து போயுள்ளதாம்.

Tags: Featured
Previous Post

புலிகளின் தலைவரின் இறுதி சுட்டறிக்கையில் சொல்லப்பட்டது என்ன? வெளிவரும் உண்மைகள்!

Next Post

2016 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

Next Post
2016 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

2016 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures